SSPFriends கல்லூரி காலங்கள்

வாங்க பழகலாம், நம்முள் பகிர்ந்து கொள்ளலாம்..

-

      கூகல் தேடலில்,  நம் வலைதளமும், அதை சார்ந்த மற்ற தளமும் இடம் பெற்றுள்ளது..

http://www.google.co.in/search?q=sspfriends&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

-

வாருங்கள் நண்பர்களே!,
        உங்கள் ஆதரவுக்கு நன்றி,  நாம் நடத்த போகும் இந்த ஆண்டு நண்பர்கள் சந்திப்பு (Friends2Gether-Meet) 2010, செயல் திட்டங்களை இங்கே விவாதிப்போம்..
         தற்போதைய செயல் திட்டம் உங்கள் பார்வைக்கு :
                   * புகைப்படம் , நிகழ்ப்படம்,
                   * இனிப்பு, வெதுப்பு பகிர்தல்,
                   * கையொப்ப ஏடு(  பங்கேற்பவர்களின்  வாசகமும், கையொப்பமும் )..
                   * T-Shirt with Logo( நபர் ஒருவருக்கு ரூ 400/-; பொறுப்பாளர் admin@sspfriends.org )

          நிகழ்ச்சியை செம்மையாக நடத்த,  உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..

-

வணக்கம் நண்பர்களே,
           எனக்கும், இக்கல்லூரிக்கும்( நான் சென்ற ஒரே கல்லூரிகூட )நெருங்கிய உறவு உண்டு .  ஏனெனில் நான் என்னை அறிந்தது, உணர்த்து, கற்றது, பெற்றது பல. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு...

என்னை பற்றி :
          அட நான்தான் உங்கள் தினி என்கிற தினேஷ்குமார் மணிக்கண்ணன்.  தினி என்பது எட்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரியரால் சுட்டபெற்ற செல்ல, புனை பெயர். என் சொந்த ஊர் வளவனூர், விழுப்புரம்( 10 கிமி )   - பாண்டிச்சேரி( 30 கிமி ) சாலை. பதினோராம் வகுப்பை பாதியில் நிறுத்தி, கல்லூரியில் சேர்த்தேன்..

        என் குடும்ப பின்னணி( தாய் வழயில் )கட்டிட துறையை சேர்த்தவர்களே அதிகம். ஆனால், என் குடும்ப நண்பரின்( மிக்க நன்றி ) பரிந்துரையில் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுத்து 2002-2005 batch படித்தேன்.